உறக்கம் விநியோகமாகியிருக்கத் துவங்கியிருந்த
முன்னிரவுகளில்
விரல் பிடித்தபடி
கழிமுகத்தில் அலைவது
ஆதிராவுக்கு பிடித்தமான ஒன்று
ஆசையும் பயமுமாய்
அலைகளோடான விளையாட்டு
அவள் அம்மாவின்
அலைபேசி அழைப்பில் தான் கலையும்
வீடு திரும்புகையில்
என் விரல் மோதிரத்தைத் திருகியபடி கேட்பாள்
‘‘ இருட்டுக்குள்ளர்ந்து எப்புடி அல வரும்”
“ இந்தக் கடல்ல இருந்து தான்
நன்னீமா வீட்டு பக்கம் ஆறு வருதா”
புன்னகையை மட்டுமே பதிலாக்குவேன்
ஒரு ஞாயிறு மாலையில்
அவளே புரிந்து கொள்ளட்டுமென
கடலின் விஸ்தீரணத்தின் முன் அமர்த்தினேன்
சற்று நேரம் திகைக்குப் போனவள்
ஆச்சர்யத்தோடு திரும்பிக் கேட்டாள்
“ அப்பா, இங்கிருக்கர வானத்திலிருந்தும் தண்ணி வருது
நம்ம வீட்டு வானத்துல இருந்தும் மழத்தண்ணி வருது
எல்லாத் தண்ணியும் எங்கிருந்துப்பா வரும்.?”
.
.
Tuesday, August 17, 2010
தெருவத்துப் பள்ளி
தூரத்து வானம் 'டம்' என்று அதிர்ந்து வெளிச்சத்தால் விரிந்தது. சவாரி வண்டியின் பக்கவாட்டில் சென்று சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த உதுமான் சட்டெனத் திரும்பிப் பார்த்தான். வாணவேடிக்கைகள் தொடங்கி விட்டிருந்தது. "மலையாளத்தானுக வெடியே வெடிதான்" என்று முணுமுணுத்தபடி மீதியையும் கழித்து விட்டு முன்னால் வந்தான். மாடுகளை வண்டியிலிருந்து கழற்றி கெட்டியாக வேர்பிடித்திருந்த குத்துச் செடியில் கட்டி விட்டு வண்டிக் கடியில் துப்பட்டியை விரித்துப் படுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த யாகூப்பிடம்
"டே யாகூப்பு, எந்திரிடா வந்துதும் வராததுமா படுக்கயப் போடற"
"ஒனக்கென்ன நொப்பமா பின்னாடி ஒக்காந்தவனுக்கு வேணாங்க வேணாங்க கேக்காம நச்சுப் பண்ணி ரேசோட்ட வெச்சு சப்பையெல்லாங் கழுண்டு கெடக்குது போ மயிறு போய் மாட்டக் கழுவு எடத்தாம் பாரு காலெல்லாம் பீச்சிருக்குது" என்றான் எரிச்சலுடன்.
"இங்காரு, இமுசு பண்ணாதடா, நம்பிக்கையா பஷீரண்ணன வேற கூட்டியாந்தாச்சு. பெரிய மனுசன்டா பாவம், பாரு கேக்குறக்குத் தருகீட்டு அங்கயும் இங்கையும் பாத்துட்டே அரக்கட்டு பீடிய ரயிலுட்டுத் தீத்துட்டாரு"
யாகூப் வந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தபடியே திரும்பி பஷீரண்ணனைப் பார்த்தான். இவன் சிரிப்பதைக் கவனித்துவிட்டாலும் எதுவும் நடக்காததாய் திரும்பிக் கொண்டார் அவர்.
"யேம் மாப்புள? இனியெப்புடிறா நாளையயின்னி நம்ம முன்னாடி பள்ளிவாசலிலல வச்சு யாருக்கும் தலாக் குடுக்கறது பஞ்சயித்தெல்லாம் பேசுவான்" என்றான் யாகூப் நக்கலாக.
"பேசுவடா? யான எளச்சுதுன்னா எறும்பு வந்து நைட்டுக்கெவ்வளோன்னு கேக்குமாம், அந்தாளுக்கு விதி."
வாய்க்கால் மேட்டில் பஷீரண்ணன் லேசான பதட்டத்துடன் நின்றிருந்தார். தலைக்குக் கீழாக கோட் சூட் வரையப்பட்ட தனது புகைப்படம் பொறிக்கப்பட்ட பஷீர் போட்டோ பீடிக் கட்டிலிருந்து பீடியை எடுத்துப் பற்றினார். ஊர்ல பெரிய மனுஷன். 40 பேருக்கு மேல் வேலை செய்யும் பீடிக் கம்பெனி ஆனாலும் என்ன செய்ய இவன்களோடு அதுவும் இந்த யாகூப்பின் நப்பாசையை உற வைக்கும் பேச்சை நம்பி வந்து தொலைத்தாயிற்று. இனி இவன்களை அதுவும் அடிக்கடி எதாவது ஒரு பஞ்சாயத்துப் பண்ணிக் கொண்டு ஜும்மாவில் ஊரையே அல்லோலகல்லோலப் படுத்தும் இவன்களை மிரட்ட முடியாதென்பதை எண்ணி நொந்து கொண்டார்.
இவன்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியானதுதான். ஏதோ ரெண்டு மூணு ஏக்கர் தோப்பும் குடியிருக்க ஆளுக்கொரு வீடும் இருக்கிறது. மத்த நேரம் பூராம் மாடுதான். அதவிட்டா சாயபு ராவுத்தர் வீதி சண்டாக் கல்லு. ஆனா வருஷ வருஷம் இவனுகளுக்கூங்கற விஷேசம் மாளகோயிலும், திருமூர்த்தி மலையும், தெருவத்துப்பள்ளியுந்தான். பயலுக ஒரு பெருநான்னாக் கூட அவ்வளவு குஷியா இருக்க மாட்டானுக. கொம்புக்கும் கலரடிக்கவும் பெயிண்டடிக்கவும் யோசனையிலிருந்தவர் "னோவ்" என்ற குரலில் திரும்பினார்.
மாடுகளைக் கழுவி மூவரும் குளித்திருந்தார்கள். அறுப்பு முடிந்து பரந்து கிடந்த வயல் வெளியில் எல்லா ஊர்களிலிருந்தும் வண்டிகள் வர வர நெரிசல் கூடியிருந்தது.
"பஸ்ட்டு நாம் போயி நேர்ச்சையைக் கழிச்சுட்டு வர்றேன். அப்புடியே டெண்ட்டு எங்க போட்டுருக்கான்னும் பாக்கறேன்" என்றபடி உதுமான் மாடுகளை அவிழ்த்து நடக்கலானான். இடத்தான் சோர்ந்தபடியே பின்னால் நடக்கத் தொடங்கியது.
மாடுகளை வைத்து ஜீவிதம் செய்பவர்கள் தொழிலுக்கோ, மாடுகளுக்கோ பிரச்சனையேதுமென்றால் தெருவத்துப் பள்ளிக்கு நேர்ச்சை செய்து கொள்வார்கள். பெரும்பாலும் இங்கு வருவதற்காகவே சாக்குப் போக்கான நேர்ச்சைகள் தான். மற்ற தர்காக்கள் போல் இல்லாமல் கபரை வளம் வர மாடுகளுக்கே பிரத்யேகப் பாதை உண்டு. பாதையின் இடையில் அடியாரின் கபரைப் பார்க்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும். திறப்பில் மாடுகளுக்கு மந்திரித்த கயிறு கட்டப்படும். பின்னர் வெளியே வந்து பாத்திஹாவுக்குக் கொடுத்து வைத்திருந்த சக்கரை கடலைப் பொட்டலத்தைப் பெற்றுக் கொண்டு கபரின் மேல் வைக்கப்பட்ட மல்லிகைச் சரத்தை மாடுகளின் கொம்புகளுக்கிடையில் தொங்கவிட்டு விட்டால் நேர்ச்சை முடிந்தது. அப்புறம் சாவகாசமாக வாய்க்காத்திட்டு திடீர்க் கடைகளில் ஸ்பெஷல் முறுகல் கேரள அல்வாவையும், நேந்திரம் பழ சிப்ஸையும் வாங்கிக் கொண்டால் அவ்வளவுதான். பிறகு பொழுது கழிக்க கடவுளின் சொந்த தேசத்தில் வேலைத் திட்டங்கள் இல்லையா என்ன?
முக்கால் மணி நேரத்தில் உதுமான் வநது சேர்ந்தான். யாகூப்பும் பஷீரண்ணனும் குடித்துக் கொண்டிருந்தார்கள். உதுமான் ஒரு மிடறு குடித்து விட்டு கப்பையைக் காரச்சட்டினியில் தொட்டுத் தின்று விட்டு அவசரப்படுத்தினான்.
"னோவ்? எந்திர்ண்ணா. குச்சியானுக கெடுபிடின்னு ஊருக்கு வெளிய மாந்தோப்புல டெண்ட்டு போட்டுருக்கானாமா. கூட்டமேறிருச்சுன்னா பனில நிக்கோனும் போயிட்டு சட்டுப் புட்டுன்னு வந்தரலாம்" என்றபடி எழுந்து யாகூப்பைத் தாங்கிப் பிடித்துத் தூக்கினான். "தாயோழி மோந்து மோந்து ஊத்தாட்டியென்ன அளவாக் குடிச்சுத் தொலையறது".
உதுமான் முன்னால் நடக்கத் தொடங்கினான். பஷீரண்ணனுக்கு உற்சாகம் பீறிட்டது. முன்பொரு நாளில் முதல் காதலி பஞ்சவர்ணம் ’யாருமில்லை வீட்டுக்கு வா’வென அழைத்தபோது இருந்த துள்ளலை இப்போது உணர்ந்தார்.
பாட்ஷா படத்தின் போஸ்டர் ஒட்டியிருந்த சுவற்றிற்கு அடுத்து கீழிறங்கிய பாதையில் நடந்த உதுமான் பின்னால் வருகிறார்களா என்று உறுதி செய்த பின் தொடர்ந்து நடக்கலானான். 'பாட்ஷா' நம்மூரிலும் இங்கும் வெளியாகி இருபத்தைந்து நாளைத் தாண்டியிருப்பது பஷீரண்ணனுக்கு ஆச்சரியமாக இருந்தது. "ரஜினிக்கு எல்லாப் பக்கமும் பேனுங்கதான் என்று நினைத்துக் கொண்டார்". வரப்புகளைத் தாண்டி மேடேறியபோது மாந்தோப்பு வந்தது.
ஒன்றிரண்டு பேர்கள் ஜென்மச் சாபல்யமடைந்தவர்களின் குதூகலத்துடன் எதிரே கடந்து போனார்கள். பஷீரண்ணன் பல்லிளித்தபடி. "உதுமா? இருக்கம் போலிருக்கு" என்றார்.
தூரத்திலிருந்து "தொள்ள தொறாக்காத வரீன்டா பொலையாடி மக்களே" என்ற குரல் வந்ததும்
உதுமான் திரும்பி கோபமானவனாய் 'கொஞ்சம் மூடிட்டு வாண்ணா? கைக்கெட்டி வாய்க்கெட்டாமப் போயறப் போகுது" என்பதற்குள் டெண்ட் வந்திருந்தது.
ஆளுயர மரங்களே இருந்த மாந்தோப்பில் நன்கு அடர்ந்த மரங்களுக்கிடையில் செம்மண் பரப்பில் குச்சிகளை சதுரமாய் நட்டு மூன்று பக்கமும் உரப்பை மறைத்திருந்தது. முன்பக்கம் வாசலாய் திரை தொங்கியது நல்ல விசாலமான கூடாரம் தான். வாசலோரம் பிரிண்டட் டிசைன் கைலியுடன் பீடிப்புகை வழியும் வாயிலிந்து சப்தமிட்டபடி வந்ததற்காக வசை பொழிந்தது. உதுமான் அவனைச் சமாதானம் செய்து கையில் ஒரு ரூபாயைத் திணித்தான். அவன் போலீஸ்காரன்களைப் பற்றிப் புலம்பியபடி இரண்டு தீக்குச்சிகளைக் கொடுத்தான். கூட்டம் வரத் தொடங்கியிருந்தது. மலையாளத்தான் அவசரப்படுத்தினான்.
உள்ளே போகத் திரையை விளக்கியவனைத் தடுத்து
"பெட்டிகிட்டியெதும் உண்டோ?"
"எதுவுமில்ல, மனுசன் மேல நம்பிக்க வெய்யுங்கடா கஞ்சியானுகளா"
அவன் திருப்தியடையாமல் சட்டைப் பையையும் இடுப்பையும் தட்டிப் பார்த்துவிட்டு ஒரு காலிப் பெட்டியை கையில் திணித்து கையிலிருந்த குச்சியால் உரப்பைச் சாக்கைத் தட்டி ஒலியெழுப்பினான். உதுமான் முறைத்தபடியே உள்ளே போனான்.
பனி நிதானமாகப் பெய்து கொண்டிருந்தது. கைகளை மார்புக்குக் குறுக்காக இறுகக் கட்டியபடியே பஷீரண்ணன் மலையாளத்தானைப் பார்த்தார். "எந்தா" என்றான் "ஒண்னுமில்ல ரெண்டு குச்சி குடு" என்று வாங்கிக் கொண்டார். அவன் அடிக்கடி காறித் துப்பிக் கொண்டிருந்தது ஏனென்று இவருக்குப் புரியவில்லை. ஆனால் அவமான உணர்வு தலையெடுக்கத் தொடங்கியது. உதுமான் வெளியே வந்து "னோவ்? சக்க" என்றான்.
பஷீரண்ணன் உள்ளே நுழைய முற்படும் போது சட்டென அவரது நெஞ்சில் கையை வைத்துத் தள்ளிவிட்டு யாகூப்பு தள்ளாடியபடியே உள்ளே நுழைந்தான். இவர் தடுமாறி விழிப்பாய் ஒருவழியாக சமாளித்து நின்றார். சுற்றியிருந்தவர்கள் கெக்கை போட்டுச் சிரித்தார்கள். அவமானம் தலைக்கேறியது. கோபமாக வந்தது. "நாய்ச் சாவுகாசம் சீலையைக் கிழிக்கும்ன்னு சொன்னது சரியாத்தானிருக்குது. கடைசிக்கு சேர்ந்து குடிக்காமலாவது இருந்திருக்க வேண்டும்" என்று புலம்பிக்கொண்டார்.
அதற்குள் நிலைமையை உணர்ந்து கொண்ட உதுமான், அவரை ஓரமாக அழைத்து "செரி விடுன்னா குடுச்சா மனுசனத் தெரியாது நாயிக்கு" என்றுவிட்டு பேச்சை வேறு திசைக்கு மாற்றினான். "உள்ள போயி குச்சிய ஒரசனதும் சரிச்சுப் புடிச்சறாதீங்க, அவிஞ்சிரும், நட்டமாப் புடிச்சா கொஞ்ச நேரம் நின்னு எரியும்" என்றான். இனி பண்ணித் தொலைக்க ஏதுமில்லாததால் அவரும் விட்டுத் தொலைத்தார்.
கடைவாய்ப் பல் வரை இளித்துக் கொண்டு வெளியே வந்த யாகூப்பு மலையாளத்தானின் கன்னங்களைக் கிள்ளி முத்தமிட்டபடி "ஐயோ, மாமு செம சூப்பரு, இதுக்கே ஆனமலையில ஒனக்கு செல வெக்கறன்" என்று உளர அவன் காறித் துப்பியபடியே இவனது சட்டையைக் கொத்தாகப் பிடித்து கீழே தள்ளினான். உதுமான் அங்கே ஓடினான்.
அமாவாசை இருட்டிலும் லேசான போதையிலும் உடம்பே இருளில் கரைந்து போய்விட்டதோவென அவருக்குத் தோன்றியது. சுவாசத்தின் வீச்சு தெளிவாகத் கேட்டது. தூரத்து வெடியின் வெளிச்சத்தில் மங்கலாக ஒரு உருவம் தெரிந்து மறைந்தது. ஒரு குச்சியை சட்டைப் பையில் பத்திரப்படுத்திக் கொண்டார். மற்றொரு குச்சியை எடுத்து சரக்கென உரசினார். வெளிச்சம் தீக்குச்சியின் மருந்துப் புள்ளியிலிருந்து விரியத் தொடங்கியது. கண்களைக் கூர்மையாக்கினார். மூலையில் நிர்வாணமாய் முழு நிர்வாணமாய் பெண்ணுருவம் நின்றிருந்தது. சற்று எடுப்பான சிரிப்பு. தீக்குச்சி சரசரவென எரிந்து கையைச் சுட 'ஸ்' என உதறிக் கீழே போட்டார். உதுமான் சொன்னது போல நேராகப் பிடிக்காமல் சரித்துப் பிடித்திருந்தது ஞாபகத்தில் வந்தது. மங்கலான பெண்ணுருவம் வேறு உற்சாகம் கொள்ளச் செய்தது. பரபரவென அடுத்த தீக்குச்சியை எடுத்து உரசினார். வெளிச்சம் பரவுவதற்குள்ளாக மேற்புறம் திறந்திருந்த டென்ட்டின் வழியாகச் சுழன்றடித்த காற்று தீயை அணைத்துப் போனது.
"அட? ரப்பே?” என்றவர் நிதானித்து இந்த நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டதற்காக வருந்தி "அஸ்தஹ்பிருல்லாஹ்" சொல்லிக் கொண்டார். என்ன செய்வதெனத் தெரியவில்லை. வெளியே போய்த்தானாக வேண்டும். அவளும் உள்ளிருந்து சாக்கைத் தட்டி ஒலியெழுப்பி விட்டாள். குச்சி அணைந்ததற்காக மலையாளத்தானிடம் சண்டைக்கா போக முடியும்? சரி தொலையட்டும் இன்னும் இரண்டு வாங்கலாமென்றால் வந்திருப்பது வேறு இவன்களுடன். இப்போதே தலைமேலேறி ஆடுகிறார்கள். இது ஒன்று போதும் ஊரே நாறடித்து விடுவார்கள். இவன்களுக்கு ஒரு விசயம் அகப்பட்டால் பள்ளிவாசல் மைக்கில் சொன்ன மாதிரி. வழியேதுமில்லை வெளியே வந்துவிட்டார்.
தூரத்தில் வெடிச்சத்தம் துவங்கியிருந்தது மாடுகளைத் தனியே விட்டு வந்திருப்பதால் காத்திருந்த உதுமான் விறுவிறுவென நடக்கத் தொடங்கினான்.
"ஏன்டா, இவனுக்குத் தெரியாம நாம குச்சி கொண்டு போயி உரசுனா என்ன பண்ணுவான்" என்றான் யாகூப் நடந்தபடி.
"ஒனக்கேண்டா இந்த தருத்தனம் புடிச்ச புத்தி, உள்ளிருக்கறவ வா வான்னு ஒக்காந்திருப்பாளாக்கும், கத்தி ஊரக் கூட்டீருவா, அதுவுமில்லாம ஒமக்கெதுக்குடா கெரகம் அவளே ஒரு ரூவாயிக்கு ஒடம்பக் காட்டறா, அவ வகுத்தெரிச்சலக் கொட்டீட்டு. புத்தி போகுது பாரு தாயோளிக்கு" என்றபடியே திரும்பி பஷீரண்ணனைப் பார்த்தான். அவர் மெதுவாகப் பின்னால் வந்து கொண்டிருந்தார்.
அவர் மனதுக்குள் மங்கலான அந்தப் பெண்ணுருவமே நிழலாடியது. முன்னால் சிலாகித்தபடியே உதுமானும் யாகூப்பும் சென்று கொண்டிருந்தார்கள். "ச்சேய்! வந்ததே அதுக்குத்தான் அதுலயும் நம்முளுக்குக் கெரகம் வந்து முன்னால நிக்குது. எப்படியாவது இன்னொருக்காப் போயி நிதானமாப் பாத்தரணும்" என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார். கையை உயர்த்தி நேரம் பார்த்தார். மணி மூன்றை நெருங்கியது. கொஞ்ச நேரத்தில் விடிந்து விடும்.
வாய்க்காத் திட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார்கள். வயல்வெளியெங்கும் ராந்தல் வெளிச்சப் புள்ளிகள் நிறைந்திருந்தது.
"உதுமா"
"ஏண்ணா"
"கள்ளுங்கப்பையும் வயித்தப் பொறட்டுது கெரகம் கொஞ்சர்றா, போயிட்டாரேன்"
"ஆமாமா, தொணைக்கி வரணுமாக்கும், பெரிய வெடி ஆரம்பிச்சு, அங்கயிங்க போனவுனெல்லாம், வெடி பாக்க ஓடிட்டிருக்கான் நீ வேற? ஒதுங்கீட்டுவா, பக்கத்துல தான வண்டி"
ஓட்டமும் நடையுமாய் மாங்காட்டுக்குள் வந்தார். வெள்ளை வேஷ்டி செம்மண் படிந்து நசநசத்திருந்தது. துரத்தில் டென்ட்டு தெரிந்தது. முன்னால் யாருமில்லை. சுற்றும்முற்றும் தேடினார். யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. காலி செய்து போயிருப்பார்களோ?.... ச்சே? சே? போயிருந்தா டென்ட்ட விட்டுட்டுப் போவானா? கூப்பிடலாம் என்பதற்குள் ஏதோ யோசித்தவராய் டிரவுசர் பாக்கெட்டைத் தட்டிப் பார்த்தார். தீப்பெட்டி சலசலத்தது. போகும் வழியில் உதுமானிடம் பீடிபற்ற வைக்க வாங்கியது நல்லதாகப் போயிற்று. மெதுவாக ஓசையெழுப்பாமல் நடந்து திரையின் பக்கமாக வந்தார். உள்ளிருந்து குரல் கேட்டது.
"ரே, ரே, ரேரேரே..... இந்தா, இந்தாடா...."
உள்ளே நுழைந்து சரக்கென குச்சியை உரசி மறக்காமல் நேராக்கிப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்தார். பரவி விரிந்த வெளிச்சத்தில் வேகவேகமாய் கீழே விரித்திருந்த துணியில் குழந்தையைக் கிடத்தி விட்டு எழுந்து நின்றாள். வாடிக்கையாளனுக்காகப் பொருத்திக் கொள்ளும் வழக்கமான சிரிப்பு வந்து ஒட்டிக் கொண்டது
http://www.lumpini.in/punaivu_story_001.html

Tuesday, May 11, 2010
இன்னும் எதையும் நேசிக்கிறாயா ஆதிரா?
இரண்டு மணல்துளிகளுக்கிடையில் கூட
நீரில்லாது
நான் கடல் குடித்ததொரு நாளில்
சாயங்களற்ற உதடுகளோடு
முத்தமிடுவாய்
கானல் நீருக்கலையும்
மீன் கூட்டங்களை விரல்களால் தழுவியபடி
நேசயாய் நேசிக்கும்
கடலையே முத்தமிட்டதாய் சிலாகித்து
மரக்குவளையொன்றில்
முலைப்பாலொடு மதுவும்
கலந்து மடியிருத்திப் புகட்டுவாய்
உன் நகங்களில் வழியும்
கடைசித் துளியையும்
உறிஞ்சியபடி கேட்பேன்
ஆதிரா,,,,
நட்சத்திரங்களையும் நீ
நேசிக்கிறாயா என்ன-
வேகவேகமாய்
மேகங்களுக்குள் புதைந்து கொள்கிறது
சிமிட்டிகள்
Thursday, March 18, 2010
Tuesday, March 16, 2010
ஒரு பெருங்கவிஞனின் சாத்தியங்கள் எதுவெனில்...
பெருங்கவிஞனொருவன்
அங்காரப் பேயைப் போல
தலைவிரித்தாடும் பஞ்சத்திற்கு
பின்னலிட்டு பூ வைத்து விடும் நோக்கில்
டாஸ்மாக்கில் விற்பனையாளனானான்
போதை தலைக்கெறியதும்
அவனது வாடிக்கையாளர்கள் நாக்குழறத் துப்பும்
துயரமும் மகிழ்ச்சியுமான நிகழ்வுகளை
மசால் பொரியும் சோடா மூடிகளும்
சிதறிக் கிடக்கும் மேசைகளிலிருந்து
தேடியெடுத்து கவிதைகள் செய்து கொண்டான்
நாள்தோறும் மிச்சம் பிடித்த
திருடிக் கொண்ட
மதுக் கலவைகளில் தாகசாந்தியடைந்த அவன்
பிறகதை பகல் பொழுதிலும்
வாடிக்கையாக்கிக் கொண்டான்
அவனின் புளித்த ஏப்பத்தின் வாசமொன்று
நாசிகளுக்கு எட்டி விட
தள்ளாடிக் கொண்டிருந்தவன்
ஒரு புளிய மரத்தினடியில் மல்லாத்தி விடப்பட
அம்மரத்திற்கு விழுதுகள் இல்லாதது குறித்து
யோசித்தபடியே உறங்கிப் போனான்
ஏதேச்சையாய் ஒருநாள் சந்தித்த போது
காரணம் கேட்க
ஒரு கவிஞனால் எப்போதும்
கவுண்டருக்கு வெளியில்தான் நிற்க முடிகிறது - என்றபடி
மீதமிருந்த மிடறுகளைக் குடித்தபடி நகர்ந்தான்

Saturday, March 13, 2010
கடலாகுதலின் சூத்திரம்
திறந்தே கிடக்கிறது பிரபஞ்சா
முத்த உதடுகளும்
கொஞ்ச மாம்சமு்ம்
இளஞ்சிவப்பு உதட்டுச்சாயம் படிந்த
நிரம்பாத புனிதக் கோப்பைகளும்
பெருநதிக்குள் இருக்கும் கதவுகள்
கடல்களுக்கு அழைத்துச் செல்கிறது
சுற்றிலும் கடலே இருக்கிறது
கடலைச் சுற்றிலும் நானே இருக்கிறேன்
சுவாசங்கள் நீராலாகிறது
பெருமூச்சுகள் முத்துச்சிற்பிகளாகிறது
முத்த உதடுகள் கடல் குடிக்கிறது
கொஞ்ச மாம்சத்தை பேரன்பு தின்கிறது
பானங்களில் கரைகிறது புனிதக் கோப்பைகள்
கடலுக்கும் எனக்கும் உதடுகளில்லை
அன்பின் நீர்மம் நேர் நிற்பவைகளைக் குடித்தலைகிறது
மதுச்சுரப்பிகளில் வாய் பதித்திருக்கும்
தீராக் குடிகாரனாகி
கலன்கள் உடைகிறது
சிவந்த மது ஆயிரம் கால்களால்
கடல் மேல் ஓடிக் கொண்டிருக்கிறது
போதையின் உச்சிகளில்
மௌனங்கள் மலர்கிற காலைகளில்
நிதம்ப நதியின் கரையோரம்
இந்திரிய விருட்சத்தின் தரையில்
ஞானம் பெற்றோம்
நாணி மலர்ந்தது ஒளிவட்டம்

Tuesday, March 9, 2010
தின்கிறோம்
என் முத்தங்களில் உடையும் மௌனங்களில்
பெருமூச்சின் கரையோரம் ஓய்ந்து
மீன் பிடித்த தருணங்களில்
ஆகச் சிறந்த தழுவல்களில்
என் அக்குள்களில் நசநசக்கும்
உதட்டுச் சாயங்களில்
ஆதிரா?
நாம் தின்கிறோம்
காலங்களை
சாவிகளை விழுங்கிவிட்ட ஜனங்களை
சாமங்களில் எப்போதாவது எழுப்பும் கணவனை
பேரன்பைப் பிரசவிக்காத இருதயங்களை
தலை கோதாத கைகளை
ஸ்கலிதமானதும் சரியும் பிரேதங்களை
பெருமூச்சின் கரையோரம் ஓய்ந்து
மீன் பிடித்த தருணங்களில்
ஆகச் சிறந்த தழுவல்களில்
என் அக்குள்களில் நசநசக்கும்
உதட்டுச் சாயங்களில்
ஆதிரா?
நாம் தின்கிறோம்
காலங்களை
சாவிகளை விழுங்கிவிட்ட ஜனங்களை
சாமங்களில் எப்போதாவது எழுப்பும் கணவனை
பேரன்பைப் பிரசவிக்காத இருதயங்களை
தலை கோதாத கைகளை
ஸ்கலிதமானதும் சரியும் பிரேதங்களை
Subscribe to:
Posts (Atom)